4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
ADDED : அக் 06, 2025 02:11 AM
புதுடில்லி,:போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்ட தென்னாப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவருக்கு, டில்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
தள்ளுபடி தென் ஆப்ரிக்க நாட்டைச் சே ர்ந்தவர் குவெண்டின் டீக். கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி போதைப் பொருள் வழக்கில் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டு, 10,500 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப் பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி குவெண்டின் டீக், சிறையில் அடைக்கப்பட்டார்.
குவெண்டின் டீக் சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி அருண் மோ ங்கோ முன் விசாரணைக்கு வந்தது.
குவெண்டின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குவெண்டினிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறும் பாக்கெட்டுகளில் இருந்து மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்புவதற்கு முன் மேலும் பல பாக்கெட்டுகளில் இருந்த மாதிரிகளையும் கலந்து அனுப்பியுள்ளனர்.
இதனால், குவெண்டினிடம் கைப்பற்றப்பட்ட பாக்கெட்டில் ஹெராயின் தான் இருந்தது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்புவதற்கு முன் பல பாக்கெட்டில் இருந்து எடுத்த மாதிரிகளையும் கலந்ததை குறுக்கு விசாரணையின் போது புலனாய்வு அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார்.
விசாரணை ஏற்கன வே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மொத்தம் 14 சாட்சிகளில் ஆறு சாட்சிகள் மட்டுமே இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை மேலும் தாமதம் ஆகும் என தெரிகிறது. எனவே, குவெண்டின் டீக் ஜாமினில் விடுவிக்கப்படுகிறார்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.