/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
/
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
ADDED : அக் 06, 2025 02:10 AM

வானுார்: ஆரோவில் செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
புதுச்சேரி மாநிலம் ஆலங்குப்பம் அன்னை நகரை சேர்ந்தவர் சஞ்சய், 21; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான அருண் (எ) சதீஷ், 30; என்பவரை அழைத்துக்கொண்டு பல்சர் பைக்கில் குயிலாப்பாளையம் பகுதி க்கு சென்றுள்ளார்.
பின் அங்கிருந்து நள்ளிரவு 12;00 மணிக்கு, ஆரோவில் வழியாக இருவரும் வீட்டிற்கு திரும்பினர். பைக்கை சஞ்சய் ஓட்டி சென்றார். விசிட்டர் சென்டர் பிரதான சாலையில் சென்றபோது, ஆரோவில் செக் போஸ்ட்டில் அமை க்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. அதில் தலையில் பலத்த காயமடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருண் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
உயிரிழந்த சஞ்சய்க்கு, பிரியா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது.