ADDED : அக் 06, 2025 01:45 AM

புதுச்சேரி: புதுச்சேரி அண்ணா சாலை ஆர்.கே.என்., கிராண்ட் ஓட்டலில் புதுமையான தோசை திருவிழா நடக்கிறது.
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஆர்.கே.என். கிராண்ட் ஓட்டலில் அமைந்துள்ள உயர்தர சைவ ரெஸ்ட்டாரண்டில் புதுமையான தோசை திருவிழா நடந்து வருகிறது.
இந்த தோசை திருவிழாவில், ராஜா ராணி, வெற்றிலை, இளநீர், சிறுதானியங்கள், மொடக்கத்தான், ராகி, கம்பு, கொள்ளு, வெஜ் சிக்கன், வெஜ் மட்டன், வெஜ் இறால், உலர் பழம், சாக்லேட் தோசைகள் உள்ளிட்ட 40 வகை சுவையான தோசைகள், 9 வகையான சட்னிகளுடன் தோசை திருவிழாவில் பரிமாறப்படுகிறது.
தோசை திருவிழா வரும் 8ம் தேதி வரை, தினமும் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடக்கிறது.
தோசை திருவிழாவில் வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்று ருசித்து மகிழ்ந்தனர்.
இத்திருவிழா தோசை பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 7397727023 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.