ADDED : ஜன 11, 2026 12:06 AM

உலகில் முன்னேற தேவைக்கேற்ப எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம். வீட்டில், குழந்தைகளுடன் பேச, தாய் மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது, அவர்களின் வேர்களுடனான தொடர்பை வலுப்படுத்த உதவும். எந்தவொரு ச மூகம், கலாசாரம் மற்றும் மதத்தைப் பாதுகாக்க மொழிதான் முக்கியம்.
அமித் ஷா மத்திய அமைச்சர், பா.ஜ.,
எஸ்.ஐ.ஆர்., மீது குற்றச்சாட்டு!
வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணி, பதிவுகளை சரிசெய்வதற்கு பதிலாக, வாக்காளர்களை நீக்குவதற்கான ஒரு நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இப்பணியின் போது, அரசியல் சார்புடனும், தன்னிச்சையாகவும் தேர்தல் கமிஷன் செயல்பட்டுள் ளது.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்
நம்பகத்தன்மை கேள்விக்குறி!
உத்தர பிரதேசத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன், எத்தனை பேர் நீக்கப்படுவர் என்பதை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை, பா.ஜ.,வினருக்கு எப்படி முன்கூட்டியே தெரியும். இது, தேர்தல் கமிஷன் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

