ADDED : ஜூன் 28, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பார்லிமென்டில் செங்கோலை வைக்கலாமா, கூடாதா என்று பேசும் சமாஜ்வாதி கட்சியினர், நலிவடைந்த, புறக்கணிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளில் பெரும்பாலும் மவுனம் காக்கின்றனர்.
மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
திகைத்து நின்றேன்!
பார்லிமென்ட் நடவடிக்கைகளில் பங்கெடுக்க வந்த என்னை போன்ற முதன் முறை எம்.பி.,க்களுக்கு, எதிர்க்கட்சிகளின் அமளி திகைப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
கங்கனா ரணாவத், லோக்சபா எம்.பி., -- பா.ஜ.,
நீட் பற்றி விவாதிக்கவில்லை!
நீட் தேர்வில் நடந்த மோசடியால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் ஜூலை 1ல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வர உள்ளன. இவை குறித்து பார்லிமென்டில் விவாதிக்க கோரிக்கை வைத்தோம். ஆனால், எந்த விவாதமும் நடக்கவில்லை.
மணீஷ் திவாரி, லோக்சபா எம்.பி., -- காங்கிரஸ்