சுற்றுலாப் பயணிகள் 40 பேரை மீட்க சிறப்பு விமானம்: கர்நாடகா முதல்வர்
சுற்றுலாப் பயணிகள் 40 பேரை மீட்க சிறப்பு விமானம்: கர்நாடகா முதல்வர்
ADDED : ஏப் 23, 2025 03:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் 40 சுற்றுலாப்பயணிகளை அழைத்து வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்ய கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் கா்நாடகாவை சேர்ந்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடாகா மாநிலத்திலிருந்து காஷ்மீரில் உள்ள பஹல்காமிற்கு சென்றுள்ள 40 பேர் அங்கு சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் அவர்களை அழைத்து வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர், பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்தார்.