ADDED : ஜன 10, 2025 11:17 PM

கத்திரிக்காயை பயன்படுத்தி பல ரெசிப்பிகள் செய்யலாம். வீடுகளில் கத்திரிக்காயை வைத்து காரக்குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, கத்திரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் வறுவல் ஆகியவை அடிக்கடி செய்வர். ஆனால், கத்திரிக்காய் முட்டை வறுவல் பெரும்பாலும் யாரும் செய்து இருக்க மாட்டார்கள்.
கத்தரிக்காயை வைத்து எப்போதும் ஒரே மாதிரி சமையல் செய்து போர் அடித்து விட்டால், கண்டிப்பாக ஒரு முறை கத்தரிக்காய் முட்டை வறுவல் செய்து பாருங்கள். ரொம்ப சுவையாக இருக்கும் இந்த ரெசிப்பியை செய்வதற்கு மிகவும் குறைந்த நேரம் தான் ஆகும். பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு இந்த வறுவல் செய்து கொடுத்தால் கண்டிப்பாக டிபன் பாக்ஸை காலி செய்துவிட்டு தான் வீட்டிற்கு வருவர். வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை:
கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். கடாயில் மல்லி, சீரகம், மிளகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு நன்கு தாளித்துக் கொள்ளவும். பின், தண்ணீரில் ஊற வைத்திருந்த கத்தரிக்காய் சேர்த்து மஞ்சள் பவுடர், உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடி, மற்றும் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி இறக்கினால் சூடான, சுவையான கத்தரிக்காய் முட்டை வறுவல் தயார்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் கால் கிலோ
முட்டை 3
மல்லி, சீரகம், மிளகு ஒரு டீஸ்பூன்
பூண்டு 3 பல்
காய்ந்த மிளகாய் 3
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
ன் உளுந்தம் பருப்பு ஒரு டீஸ்பூ
கடுகு அரை டீஸ்பூன்
* ஒரு கொத்து கறிவேப்பிலை