ராஜஸ்தானில் கத்தி குத்து சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த மாணவர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் கத்தி குத்து சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த மாணவர் உயிரிழப்பு
ADDED : ஆக 19, 2024 10:21 PM

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கத்தி குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 15 வயது மாணவர் இன்று சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் உதய்பூரின் பட்டியானி சோஹட்டா பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன் பள்ளியின் வெளியில், 10ம் வகுப்பு மாணவரை, அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.
படுகாயமடைந்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஹிந்து அமைப்பினர் போராட்டம் கலவரமாக மாறியது. கார்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன. உதய்பூரில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு காலவரையரையின்றி விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கத்தி குத்து சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் நான்கு நாட்கள் சிகிச்சைபெற்று வந்த 15 வயது 10 ம் வகுப்பு மாணவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.