sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின்; மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

/

கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின்; மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின்; மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின்; மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

19


ADDED : நவ 20, 2025 03:27 PM

Google News

19

ADDED : நவ 20, 2025 03:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து சர்ச்சையை உருவாக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

கைவிரிப்பு


சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே, 31.93 கி.மீ., துாரத்திற்கும், கோவையில், அவிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரை; உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை, 39 கி.மீ., துாரத்திற்கும் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும், மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு, கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை, 10 மாதங்களுக்கு முன், தமிழக அரசு அனுப்பியது.

இந்நிலையில், மேற்கண்ட இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களின் திட்ட அறிக்கையை, மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. 'கடந்த 2017ம் ஆண்டு விதிகளின்படி, மக்கள் தொகை, 20 லட்சத்திற்கு மேலுள்ள நகரங்களில் மட்டுமே, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவையில் மக்கள் தொகை, 15.84 லட்சம், மதுரையில், 15 லட்சம் தான்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன், மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பதிலாக, இந்த இரு நகரங்களிலும், தனி பாதையில் பஸ்கள் மட்டுமே இயக்கப்படும், பி.ஆர்.டி.எஸ்., போன்ற திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டு


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் 'NO METRO' என நிராகரித்துள்ளது மத்திய பாஜ அரசு!

பாஜ ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதை தமிழக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்! இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

விளக்கம்


இதற்கு பதிலளித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மெட்ரோ ரயில் அமைப்புகள் போன்ற விலை உயர்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் பொது மக்களுக்கு அதிகபட்ச நன்மை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக 2017 ல் மெட்ரோ கொள்கை வடிவமைக்கப்பட்டது. இதனை பயன்படுத்துவதை முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து சர்ச்சையை உருவாக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.2024 அக்., 3 அன்று மத்திய அரசால் சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டமாக 119 கி.மீ., நீளத்துக்கு 63,246 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. இந்தப் பெருந்தன்மையான ஒப்புதலை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அரசியல் செய்கிறார்.

கோவை மற்றும் மதுரை திட்டங்களில் பின்வரும் முரண்பாடுகள் உள்ளன.

1. கோவையில் உள்ள பாதையின் நீளம், சென்னை மெட்ரோ அமைப்பின் பாதையின் நீளத்தை விடக் குறைவாக இருந்தும், சென்னையை விட அதிகமானபோக்குவரத்து திட்ட மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இது முதல்பார்வையிலேயே தவறாக தெரிகிறது.

2.சாலைப் போக்குவரத்துக்கும் மெட்ரோவுக்கும் இடையிலான திட்டமிடப்பட்ட சராசரி பயண நீளம் மற்றும் வேக வேறுபாடுகள், ஆகியவை, போக்குவரத்து முறை மெட்ரோ அமைப்புக்கு மாறுவதற்கு ஏற்றதாக இல்லை.

3. கோவையில் விரிவான திட்ட அறிக்கையின்படி 7 மெட்ரோ ரயில் நிலைய இடங்களில்போதுமான வழி உரிமை இல்லை.

4. மதுரையின் விரிவான போக்குவரத்துத் திட்ட ஆவணம்(Comprehensive Mobility Plan) தற்போதைய பயணிகள் எண்ணிக்கையின்படி விரைவு பஸ் போக்குவரத்து அமைப்பு(BRTS) மட்டுமே பொருத்தமானது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

கோவை மாநகராட்சியின் மக்கள் தொகை 2011 ல் 15.85 லட்சம். உள்ளூர் திட்டமிடல் பகுதி மக்கள் தொகை 7.7 லட்சம். போக்குவரத்து மாற்றத்துக்கான பயணிகள் எண்ணிக்கை மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூர் திட்டமிடல் பகுதிக்குள் மாதிரி மாற்றங்களுக்கு பயணிகள் எண்ணிக்கை யூகம் செய்யப்படுகின்றன. இது கோவை மாநகராட்சி பகுதியை விட ஐந்து மடங்கு பெரியது.

மெட்ரோ அமைப்புக்கு எவ்வளவு பெரிய போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்பதற்கான நியாயமான விளக்கம் தேவை.

மேலும், பல்வேறு நகரங்களில் 10 ஆயிரம் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பஸ்களை வழங்குவதற்காக Goi Pm மின்சார பஸ் சேவையின் பலனை பயன்படுத்த வேண்டாம் என தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பஸ்கள் டிப்போ உள்கட்டமைப்பு மற்றும் மீட்டர் வசதிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கப்படுகிறது. பல முறை வற்புறுத்திய போதிலும் தமிழக அரசு இதுவரை இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் மனோகர்லால் கட்டார் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us