4 மாதங்களுக்கு மட்டும் சுமார் ரூ 829 கோடி ஊதியம்; ஸ்டார்பக்ஸ் சி.இ.ஓ.,வின் வேற லெவல் சம்பாத்தியம்!
4 மாதங்களுக்கு மட்டும் சுமார் ரூ 829 கோடி ஊதியம்; ஸ்டார்பக்ஸ் சி.இ.ஓ.,வின் வேற லெவல் சம்பாத்தியம்!
ADDED : ஜன 27, 2025 01:07 PM

புதுடில்லி: கடந்த செப்டம்பரில் ஸ்டார்பக்ஸ் சி.இ.ஓ.,வாக பணியில் இணைந்த பிரையன் நிக்கோல், 2024ம் ஆண்டு (பணி செய்த 4 மாதங்களுக்கு மட்டும்) சுமார் ரூ.829 கோடி ஊதியம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் வாஷிங்டன்னை தலைமையிடமாக கொண்டு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தேநீர், காபி போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில், கடந்த செப்டம்பர் மாதம் சி.இ.ஓ.,வாக, பிரையன் நிக்கோல் பணி அமர்த்தப்பட்டார். இவருக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் டாஸ்க் கொடுத்து இருந்தது.
இவர் பொறுப்பேற்ற சில நாட்களில் நிறுவனம் விருப்பத்தின் படி வியாபாரம் கொடி கட்டி பறந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பரில் ஸ்டார்பக்ஸ் சி.இ.ஓ.,வாக பணியில் இணைந்த பிரையன் நிக்கோல், 2024ம் ஆண்டு (பணி செய்த 4 மாதங்களுக்கு மட்டும்) சுமார் ரூ.829 கோடி ஊதியம் பெற்றுள்ளார்.
இது போக கலிபோர்னியாவில் இருந்து ஸ்டார்பக்ஸ் தலைமை அலுவலகம் உள்ள சியாட்டல் வரை செல்ல நிக்கோலுக்கு தனி ஜெட் விமானம், வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளையும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் பொறுப்பு ஏற்றுள்ளது. பிற நிறுவன சி.இ.ஓ.,க்களான சுந்தர் பிச்சை, டிம் குக் ஊதியத்தை விட இது அதிகம்.
இதன் மூலம் அமெரிக்காவில் அதிகம் சம்பளம் பெறும் 20 சி.இ.ஓ.,க்களில் ஒருவராக பிரையன் நிக்கோல் மாறி சாதனை படைத்துள்ளார். பிரையன் நிக்கோல் ஒரு அமெரிக்க தொழிலதிபர். இவருக்கு வயது 51. இவர் லக்ஷ்மன் நரசிம்மனுக்குப் பதிலாக செப்டம்பர் 9, 2024ல் ஸ்டார்பக்ஸ் சி.இ.ஓ.,வாக பணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

