தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/என்னை விஜயுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள்; தொண்டர்களுக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தல்

என்னை விஜயுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள்; தொண்டர்களுக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தல்

என்னை விஜயுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள்; தொண்டர்களுக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தல்


ADDED : மே 16, 2026 04:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 04:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹைதராபாத்: விஜய்யுடன் என்னை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தவெக.ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. முதல்வராக அக்கட்சியின் தலைவர் விஜய் உள்ளார். விஜய் கட்சி ஆரம்பித்த தருணத்தில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோரை ஒப்பிட்டு, நடிகர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக விழாது என்று விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் பவன் கல்யாண் கட்சி தொடங்கிய போது முதல் தேர்தலின் போது இரு இடங்களில் களம் கண்டு தோல்வியை சந்தித்தார். ஆனால் விஜயோ ஆட்சியையே பிடித்து விட்டார். சமூக வலை தளங்களிலும், அரசியல் களத்திலும் சில நாட்களாக விஜயை ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணுடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.

இந் நிலையில் மங்களகிரியில் உள்ள கட்சியின் தலையகத்திற்கு பவன் கல்யாண் வந்திருந்தார். அங்கு கட்சி தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அவர் முதல்வர் ஆனதில் இருந்து எனக்கு மக்கள் தரப்பில் இருந்து கடும் அழுத்தம் வருகிறது. நமது அண்டை மாநிலத்தில் ஒரு நடிகர் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்து இருக்கிறார். அவர் போல ஆந்திராவிலும் நான் அதையே செய்திருக்க வேண்டும் என்று பலர் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர்.

பக்கத்து தெருவில் ஒரு திருமணம் நடந்தால் தங்கள் வீட்டில் தான் திருமணம் நடக்கிறது போல, சிறுவர்கள் குஷி ஆவார்கள். அதுபோல இருக்கிறது. ஆந்திரா, தமிழகம்... இந்த இரு மாநிலங்களின் நிலைமையும் வேறு வேறு. 2019ல் நான் போட்டியிட்டேன்.

ஆனால் என்ன நடந்தது? மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. என்னுடைய அமைச்சர்களே உடன் இருந்து எனக்கு ஆதரவு தரவில்லை. எனவே, மற்றவர்களுடன் என்னை ஒப்பிடாதீர்கள்.

இவ்வாறு பவன் கல்யாண் பேசினார். தொண்டர்கள் மத்தியில் அவர் பேசும் போது எந்த இடத்திலும் விஜய் பெயரை குறிப்பிடவே இல்லை. அவர் என்றே குறிப்பிட்டே பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us