ADDED : பிப் 16, 2024 06:59 AM
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவின் சில தொகுதிகளில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்களுக்கு, பா.ஜ.,வில், 'சீட்' தரப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணி மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளிலும், வெற்றி பெற நினைக்கிறது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்த, நாராயண கிருஷ்ணாஜ பந்தகேக்கு, பா.ஜ., மேலிடம் வாய்ப்பு அளித்து உள்ளது.
இதனால் லோக்சபா தேர்தலிலும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்களுக்கு, பா.ஜ., 'சீட்' கிடைக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மாநிலத்தின் எந்தெந்த தொகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்.,க்கு அதிக பலம் உள்ளது என்று, கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினருக்கு 'சீட்' கிடைக்கலாம் என்று, பா.ஜ., மூத்த தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்த 10 பேருக்கு, பா.ஜ.,வில் சீட் கிடைத்தது. இந்த ஆண்டு எத்தனை வழங்கப்படும் என தெரியவில்லை.