
பா.ஜ.,வினர் 24 மணி நேரமும் முழு வீச்சில் இயங்கி வருகின்றனர். அரசியலில், அவர்கள் வலிமையான எதிரிகள். கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் நினைத்ததை செய்து முடித்துவிடுவர். எனவே, எதிர்க்கட்சியினர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அசாதுதீன் ஓவைசி தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,
முரண்பாடான செயல்!
தலிபான்கள் ஆளும் ஆப்கன் அரசை, இந்தியா ஆதரிப்பதுமுரண்பாடாக உள்ளது. ஆப்கன் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அளிக்கும் மத்திய அரசு, உள்நாட்டில் வாழும் முஸ்லிம் மாணவர்களுக்கான உதவித்தொகையை ரத்து செய்கிறது.
மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
சீர்குலைக்கும் நடவடிக்கை!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய பல்வேறு சட் டத்திருத்தங்களை மேற்கொள்ளும் மத்திய அரசு, அதை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு தொடர்பான சில தகவல்களை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
சிவகுமார் கர்நாடக துணை முதல்வர், காங்கிரஸ்