ADDED : பிப் 10, 2025 01:47 AM

அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பா.ஜ., பலவீனப்படுத்துகிறது. அரசியலமைப்பை பாதுகாக்கவும், இந்தியாவின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் காங்கிரஸ் போராடுகிறது. இது, உண்மையான போராட்டம்; மக்களின் உரிமைக்கான போராட்டம்.
- பிரியங்கா
எம்.பி., காங்கிரஸ்
மாற்றம் ஏற்படாது!
டில்லி சட்டசபை தேர்தல் வெற்றி, பீஹாரில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஜனநாயகத்தில் மக்களே உயர்ந்தவர்கள். டில்லியில், 27 ஆண்டுகளுக்கு பின் அரியணை ஏறியுள்ள பா.ஜ., மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
-,தேஜஸ்வி யாதவ்
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
ஜிலேபி சாப்பிடும் நேரம்!
டில்லி மக்கள் பா.ஜ.,வுக்கு வரலாற்று வெற்றியை அளித்துள்ளனர். இது ஜிலேபி சாப்பிடும் நேரம். அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு எதையும் செய்யாமல், பொய்யை மட்டுமே பேசி வந்தார். மத்திய அரசின் திட்டங்களை மக்கள் அனுபவிக்க, அவர் விடவே இல்லை.
- நயாப் சிங் சைனி
ஹரியானா முதல்வர், பா.ஜ.,