ADDED : ஜூலை 20, 2025 02:43 AM
புதுடில்லி:டில்லி பல்கலையில், 2025 - 20-26ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை முதல் பட்டியலை நேற்று வெளியிடப்பட்டுஉள்ளது.
டில்லி பல்கலையின் கீழ் உள்ள, 69 கல்லூரிகளில் 79 இளங்கலை பட்டப் படிப்புகளில், 71,624 இடங்கள் உள்ளன. விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்த நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ - மாணவியர் பட்டியல் நேற்று மாலை. 5:00 மணிக்கு வெளியிடபட்டது.
இந்த சேர்க்கையை விண்ணப்பதாரர்கள் வரும் 21ம் தேதி மாலை 4:59 மணிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கல்லூரிகள், 22ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சரிபார்த்து அங்கீகரிக்கும்.
சேர்க்கைக் கட்டணத்தை, 23ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இரண்டாவது பட்டியல், 28ம் தேதி மாலை 5:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதலாமாண்டு இளங்கலை வகுப்புகள் ஆகஸ்ட் 1ம் தேதி துவக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.