ADDED : பிப் 05, 2025 09:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹரோஹள்ளி; பெங்களூரு நர்சிங் கல்லுாரியில், கேரள மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கேரளாவின் கண்ணுாரை சேர்ந்தவர் அனாமிகா, 19. பெங்களூரு ரூரல் ஹரோஹள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரி விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, அனாமிகாவுடன் அறையில் தங்கியிருந்த சக மாணவியர் உணவு சாப்பிட சென்றனர். அனாமிகா மட்டும் அறையில் தனியாக இருந்தார். உணவு சாப்பிட்டு விட்டு வந்த சக மாணவியர் கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.
ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது அனாமிகா துாக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த ஹரோஹள்ளி போலீசார் அங்கு சென்று அனாமிகா உடலை மீட்டனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.