ADDED : ஜன 12, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா: உத்தர பிரதேசத்தில், 'பார்ட்டி'யில் பங்கேற்க நண்பர் வீட்டுக்கு சென்ற சட்டக் கல்லுாரி மாணவர், ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
உ.பி.,யின் காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தபாஸ்; நொய்டாவில் உள்ள தனியார் பல்கலையில் சட்டம் பயின்று வந்தார்.
நொய்டாவின் செக்டார் 99 பகுதியில் உள்ள சுப்ரீம் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில், ஏழாவது மாடியில் உள்ள நண்பரின் வீட்டில் நடந்த பார்ட்டியில் பங்கேற்க, தபாஸ் சமீபத்தில் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக, மாடியில் இருந்து அவர் தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே தபாஸ் உயிரிழந்தார். இது விபத்தா, கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.