ADDED : செப் 30, 2025 03:47 AM

பெங்களூரு : பெங்களூரில், சாலை பள்ளத்தால் நடந்த விபத்தில், கல்லுாரி மாணவி உயிரிழந்தார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் பெங்களூரில் உள்ள பல சாலைகள் மேடும், பள்ள முமாக காட்சி அளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்; விபத்துகளும் ஏற்படுகின்றன.
பெங்களூரு, ஆவலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் தனுஸ்ரீ, 22; தனியார் கல்லு ாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார். இவர், நேற்று காலை ஸ்கூட்டியில் கல்லுாரிக்கு கிளம்பினார். பூஜிகெரே கிராஸ் அருகே சாலையில் பெரிய பள்ளம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பள்ளத்தில் வண்டியை இறக்குவதை தவிர்க்க, ஓரமாக செல்ல முயற்சித்தார். இதில், நிலைதடுமாறி வாகனத்துடன் சாலையில் விழுந்தார். அப்போது, பின்பக்கமாக வந்த டிப்பர் லாரி, மாணவி மீது ஏறியது. இதில், மாணவி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கே.ஆர்.புரம் போக்குவரத்து போலீசார், மாணவி உடலை மீட்டனர். லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 'ஒரு உயிரை காவு வாங்கிய பிறகும், சாலை பள்ளங்கள் எப் போது தான் மூடப்படும்' என, சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.