ADDED : நவ 26, 2024 02:03 AM
புதுடில்லி: டில்லி பல்கலை மாணவர் சங்கத்துக்கான தேர்தல், கடந்த செப்., 27ல் நடந்தது. இதன் முடிவுகள், அடுத்த நாளே வெளியிடப்படுவதாக இருந்தது. இருப்பினும், மாணவர்கள் மோதல், போலீஸ் தாக்குதல் உட்பட பல்வேறு விவகாரங்கள் காரணமாக, முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் நிலவியது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், தலைவர் பதவிக்கு காங்கிரஸ் ஆதரவு பெற்ற இந்திய தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ரவுனக் காத்ரி வெற்றி பெற்றார்.
ஆர்.எஸ்.எஸ்.,சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.,யைச் சேர்ந்த பானு பிரதாப் துணை தலைவர் பதவியை கைப்பற்றினார். செயலர் பதவிக்கான தேர்தலில் ஏ.பி.வி.பி.,யின் மித்ரவிந்த கரன்வாலும், துணைச் செயலருக்கான தேர்தலில் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் லோகேஷ் சவுத்ரியும் வெற்றி பெற்றனர்.