உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 25, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: டில்லி லோதி சாலை, ‘ஏர்போர்ஸ் பால பாரதி’ பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, 23ம் தேதி இ–மெயில் வாயிலாக மிரட்டல் வந்தது.
போலீஸ் நடத்திய சோதனையில் புரளி என உறுதி செய்யப்படது. இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் தீவிர ஆய்வு நடத்தினர். அதே பள்ளியில் படிக்கும், 15 வயது மாணவி இந்த இ–மெயில் அனுப்பியதை கண்டுபிடித்தனர். அந்தச் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதற்காக இ–மெயில் அனுப்பியதாக வாக்குமூலம் அளித்தார். சிறுவர் நீதி சட்ட பிரிவுகளின் கீழ், அந்த மாணவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறினர்.
