தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

1


UPDATED : அக் 25, 2026 05:35 PM

ADDED : அக் 25, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 05:35 PM ADDED : அக் 25, 2026 05:32 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள சாயமர் தாதா கும்பலை சேர்ந்தவர் கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டார். வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டில்லி தாதாக்களில் ஒருவரான சாயமர் கும்பலை சேர்ந்த சாவன். பல குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர். டில்லி மற்றும் உத்தர பிரதேச போலீசார் நீண்ட காலமாக சாவனை தேடி வந்தனர்.

உத்தர பிரதேசத்தின் ஜான்பூரில் 2014ம் ஆண்டு நடந்த கொள்ளை தொடர்பாக தேடப்பட்ட சாவன் குறித்து தகவல் தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என வாரணாசி கூடுதல் டி.ஜி.பி., அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், டில்லி புறநகரில் உள்ள பண்ணை வீடுகளில் கொள்ளையடிக்க சாவன் திட்டமிட்டு இருப்பதாக டில்லி மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

தெற்கு டில்லி மைதான் கர்ஹியில் நேற்று முன் தினம் இரவில் இருந்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை, 6:25 மணிக்கு ஒரு பைக்கில் சாவன் வருவது உறுதி செய்யப்பட்டது. அந்த பைக்கை போலீசார் வழிமறித்தனர்.

ஆனால், போலீசை நோக்கி சாவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் வலது காலில் குண்டு பாய்ந்த சாவன் சரிந்தார். போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சாவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us