பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை கோரி மனு; தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை கோரி மனு; தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
UPDATED : பிப் 12, 2025 07:35 PM
ADDED : பிப் 12, 2025 03:07 PM

புதுடில்லி: முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் டி.எஸ்.பி., காதர் பாஷா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் சிலை திருடப்பட்ட வழக்கில், அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., காதர் பாட்சாவை ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கைது செய்தார்.இது சட்ட விரோதமான கைது என்றும், பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை காதர் பாட்சா தொடர்ந்தார். இந்த வழக்கை, உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காதர் பாட்சா மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு ஐந்தாண்டுக்கு மேலாக நடந்தது.வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, காதர் பாட்சாவின் மனுவை டிஸ்மிஸ் செய்து இன்று உத்தரவிட்டது.