நடப்பாண்டில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையில் விலக்கு; சிபிஎஸ்இக்கு சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
நடப்பாண்டில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையில் விலக்கு; சிபிஎஸ்இக்கு சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
ADDED : செப் 28, 2026 05:16 PM

புதுடில்லி: நடப்பாண்டில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது மொழி கட்டாயம் என்பதில் இருந்து விலக்கு அளிக்குமாறு சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சிபிஎஸ்இ மும்மொழி கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது, மத்திய அரசின் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் கூறியதாவது;
6ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும். நாடு முழுவதும் 28,819 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1.2 சதவீதம் பள்ளிகளை தவிர மற்றவற்றில் மும்மொழி கொள்கையை செயல்படுத்த தயாராக இருக்கின்றன. மாணவர்களும் மொழிகளை தேர்வு செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கூறுகையில், 3வது மொழியை பயிலும் 7,8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள், 10ம் வகுப்புச் செல்லும்போது 3வது மொழிக்கு சிபிஎஸ்இ போர்டு தேர்வை எழுத வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட பள்ளியின் அளவிலேயே மதிப்பீடு செய்யப்படும். அதில் தேர்ச்சி, தேர்ச்சியில்லை என்பது கிடையாது என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு கூறியதாவது; 6ம் வகுப்பு மாணவர்களுக்கும், 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. அதே விலக்கு தரப்படவேண்டும். 3வது மொழி மதிப்பீட்டில், பள்ளிகளில் தேர்ச்சி பெற்றவர், தேர்ச்சி பெறாதவர் என்று இருக்காது. சான்றிதழில் தேர்வில் பங்கேற்றார் என்பது மட்டுமே இருக்கும்/
மாணவர்களுக்கு சிரமத்தை தர விரும்பவில்லை. மாறாக அவர்களுக்கும் தேவையான வசதிகளை அளிக்க விரும்புகிறோம்' என்றார்
