தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்கம்பம் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அண்ணா சதுக்கம்,இ.சி.ஆரில் சாலை மறியல் 

மின்கம்பம் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அண்ணா சதுக்கம்,இ.சி.ஆரில் சாலை மறியல் 

மின்கம்பம் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அண்ணா சதுக்கம்,இ.சி.ஆரில் சாலை மறியல் 


ADDED : செப் 28, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடற்கரையில் மின்கம்பம் உடைந்து விழுந்து குழந்தை இறந்த சம்பவத்தை கண்டித்து குழந்தையின் பெற்றோர், கடற்கரை வியாபாரிகள் அண்ணா சதுக்கம் சிக்னல் பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தஸ்லீம், ரிகானா தம்பதியினர் வம்பாக்கீரப்பாளையத்தில் தங்கி புதுச்சேரி கடற்கரையில் மின் விளக்குகள், பொம்மைகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ரிகானா தனது 7 வயது குழந்தை பைசலுடன், அஜாந்தா ஓட்டல் அருகே கடற்கரையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது, அங்கிருந்த மின் கம்பம் ஒன்று, பைசல் மார்பு மீது விழுந்தது. உடன் பொதுமக்கள் குழந்தையை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் விபத்து மரணம் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குழந்தை இறந்த சம்பவத்தை கண்டித்து குழந்தையின் பெற்றோர், கடற்கரை சிறு வியாபாரிகள், பொதுநல அமைப்பினர் காலை 11:20 மணிக்கு அண்ணா சதுக்கம் சிக்னல் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த நேரு எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக, தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். 

மறியல் காரணமாக அண்ணா சதுக்கம் சிக்னல் பகுதிகளில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, அவ்வழியாக வந்த தற்காலிக சபாநாயகர் அன்பழகனை, நேரு எம்.எல்.ஏ., மற்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் குழந்தை இறப்பிற்கு உரிய விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். 

இதே கோரிக்கையை வலியுறுத்தி காலாப்பட்டு அம்பேத்கர் சட்ட கல்லுாரி மாணவ, மாணவிகள் இ.சி.ஆரில் நேற்று காலை 11:00 மணிக்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால், இ.சி.ஆரில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us