தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் 

ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் 

ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் 


ADDED : செப் 28, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, மறைமலையடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது.

முகாமை, கால்நடை துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் துவக்கி வைத்தார். இதில், இணை இயக்குனர்கள் குமரன், ராஜு, கால்நடை மருத்துவமனை டாக்டர் சரளாதேவி, ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் தெரு நாய்களுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், நகராட்சிகள் மூலம் அனைத்து நாய்களுக்கும் உரிமம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதேபோல், கால்நடைத்துறை மூலம் வில்லியனுார், பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனுார் பகுதிகளிலும், நகராட்சிகள் மூலமாகவும் ரேபிஸ் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. 

இது குறித்து இணை இயக்குநர் குமரன் அளித்த பேட்டியில், ஆண்டுதோறும் செப்டம்பர் 28 ம் தேதி உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு ‘ஒன்றுபட்டால் ரேபிஸ் நோயை ஒழிக்கலாம்’ என்ற கருத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, இந்தியாவில் ஆண்டு 30 ஆயிரம் பேர் ரேபிஸ் நோயால இறக்கின்றனர். நாய், பூனை வளர்பவர்கள் நகராட்சி மூலம் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். மேலும், நாய்களுக்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு, மைக்ரோ சிப்பும் இலவசமாக பொருத்தப்படுகிறது.

எனவே வளர்ப்பு நாய், பூனை வைத்துள்ளவர்கள் புதுச்சேரி நகராட்சி மற்றும் கால்நடைத் துறையை அணுகி தடுப்பூசி செலுத்திக்கொண்டும், உரிமம் பெற்றும், மைக்ரோசிப் பொருத்தியும் நோய்களை கட்டுப்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும். என்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us