தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., சார்பில் ஜிப்மரில் ரத்த தானம் முகாம்

பா.ஜ., சார்பில் ஜிப்மரில் ரத்த தானம் முகாம்

பா.ஜ., சார்பில் ஜிப்மரில் ரத்த தானம் முகாம்


ADDED : செப் 28, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின், 25 ஆண்டு கால தொடர் சேவையை போற்றும் வகையில், பா.ஜ. சார்பில்,  ரத்த தானம் முகாம் நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின், 25 ஆண்டு கால தொடர் சேவையை போற்றும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், பா.ஜ., மாநில துணை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமையில் ரத்ததான முகாம் நடந்தது.  முகாமினை, மாநிலத் தலைவர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில், பிரதமர் மோடியின், 76ம் ஆண்டு பிறந்த நாளை குறிக்கும் வகையில், 76 தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில், தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ், தெலுங்கானா துணை அமைப்பு பொதுச் செயலாளர் தஷ்ரத், முன்னாள் சபாநாயகர் செல்வம், மீனாட்சி சுந்தரம் எம்.எல்.ஏ.,  முன்னாள் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், தொடர்பாளர் அருள்முருகன், மாவட்ட தலைவர்  உலகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் ரமணா சங்கர், இந்திரா நகர் தொகுதி தலைவர் அருள் வேந்தன், பட்டியல் அணி மாநிலத் தலைவர் காத்தவராயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, மாநில ஓ.பி.சி., அணி தலைவர்  கோவேந்தன் கோபதி, இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us