மின் இணை வழங்க லஞ்சம் தற்காலிக சபாநாயகர் குற்றச்சாட்டு
மின் இணை வழங்க லஞ்சம் தற்காலிக சபாநாயகர் குற்றச்சாட்டு
ADDED : செப் 28, 2026 05:31 PM
புதுச்சேரி: மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் வரை கையூட்டு பெறப்படுவதாக தற்காலிக சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சிறுவன் மரணத்திற்கு பிறகு இது சம்பந்தமாக மின்துறை அதிகாரிகள் அழைத்து பேசினேன். சாதாரணமாக மின் இணைப்பு வழங்க வீட்டின் உரிளையாளர்களை மிரட்டி ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை கையூட்டு பெற்றுக் கொண்டுதான் பணிகளை செய்கின்றனர். இது குறித்து துறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளேன். என் தொகுதியில் 90க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உப்புக் காற்றால், செல்அறித்து விழும் அபாயம் உள்ளது என எடுத்துக் கூறியும் நடவடிக்கை இல்லை.
. மின்துறைக்கு பட்ஜெட்டில் முதல்வர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனாலும், அந்த துறையின் செயல்பாடு முறையாக இல்லை. அதேபோல் அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது. தகுதியான பணியாட்கள் இருக்கிறார்களா, கமிஷன் வாங்கி கொண்டு குறைந்த கொட்டேஷன்ல பொருட்கள் போட்டார்களாக என தெரியவில்லை.
தற்போது கடற்கரையில் சிறுவன் இறந்ததற்கு யார் பொறுப்பேற்க போகின்றனர். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், காங்., கட்சிக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிரசாரம் செய்தால், என்.ஆர்.காங்., வேட்பாளர் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.
