ராஜஸ்தான்: இடைத்தேர்தலில் பா.ஜ., அமைச்சர் தோல்வி: காங்கிரஸ் வெற்றி
ராஜஸ்தான்: இடைத்தேர்தலில் பா.ஜ., அமைச்சர் தோல்வி: காங்கிரஸ் வெற்றி
ADDED : ஜன 08, 2024 04:56 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரன்பூர் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பா.ஜ., அரசில் அமைச்சராக இருக்கும் சுரேந்திர பால்சிங் 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காங்., வேட்பாளர் ருபிந்தர் கூனர் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கரன்பூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருந்த வேட்பாளர் குர்மீத் சிங் காலமானார். இதனால் இந்த தொகுதிக்கு மட்டும் ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை.
இந்நிலையில் ராஜஸ்தானில் கரன்பூர் சட்டசபை தொகுதிக்கு கடந்த 5ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் போட்டியிட்டார். இவர் பா.ஜ., அமைச்சரை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றுள்ளார்.
பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் குன்னார் 12 ஆயிரத்து 750 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.