ADDED : ஜன 16, 2025 09:30 PM
நஜாப்கர்:2020 கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவர் நஜாப்கரில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2020ம் ஆண்டு நரேலா பகுதியில் ஒன்பது பேர் கொண்ட ஒரு கும்பல், கொள்ளையடிக்க முயன்றது. அப்போது ஏற்பட்ட மோதலில் இரண்டு காவலாளிகளை அந்த கும்பல் கொலை செய்து, தப்பியது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கும்பலைத் தேடி வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சன்னி, 26, என்ற வாலிபரை டில்லி நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக 2022ல் அறிவித்தது. அவரை தேடும் பணி தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், நஜாப்கர் பகுதியில் சன்னி தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட பகுதியை போலீசார் சுற்றிவளைத்தனர். அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சன்னியை போலீசார் கைது செய்தனர்.
சன்னி மீது குறைந்தது ஏழு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.