sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுவாமியே சரணம் ஐயப்பா -4: தினம் ஒரு தகவல்;'பதினெட்டாம்படி நாதனே...

/

சுவாமியே சரணம் ஐயப்பா -4: தினம் ஒரு தகவல்;'பதினெட்டாம்படி நாதனே...

சுவாமியே சரணம் ஐயப்பா -4: தினம் ஒரு தகவல்;'பதினெட்டாம்படி நாதனே...

சுவாமியே சரணம் ஐயப்பா -4: தினம் ஒரு தகவல்;'பதினெட்டாம்படி நாதனே...


ADDED : நவ 20, 2025 12:55 AM

Google News

ADDED : நவ 20, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐயப்பனை சபரிமலையில் தரிசிக்க வேண்டும் என்றால் விரதமிருந்து 18 படிகளில் ஏற வேண்டும்.

ஐயப்பனுக்கு நடக்கும் பூஜை அனைத்தும் 18 படிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு பெயரில் ஐயப்பனும், அதற்குரிய தெய்வமும் குடியிருக்கின்றனர். இதன் வழியே செல்பவர்களின் பாவம் தீரும்.

திருப்படி ஐயப்பனின் பெயர் தெய்வம்

1 குளத்துப்புழை பாலகன் சூரியன்

2 ஆரியங்காவு ஐயன் சிவபெருமான்

3 எருமேலி சாஸ்தா சந்திரன்

4 அச்சன்கோவில் அரசன் பராசக்தி

5 புவனேஸ்வரன் அங்காரகன்

6 வீரமணி கண்டன் முருகன்

7 பொன்னம்பல வாசன் புதன்

8 மோகினி பாலன் பெருமாள்

9 சிவ புத்ரன் குரு

10 ஆனந்த சித்தன் பிரம்மா

11 இருமுடிப் பிரியன் சுக்கிரன்

12 பந்தள ராஜகுமாரன் மகாலட்சுமி

13 பம்பா வாசன் சனீஸ்வரர்

14 வன்புலி வாகனன் எமதர்மன் 15 ஹரிஹர சுதன் ராகு

16 சத்குரு நாதன் சரஸ்வதி

17 பிரமாண்ட நாயகன் கேது

18 சத்ய ஸ்வரூபன் விநாயகர்

படிபூஜையின் போது பூக்கள், வெள்ளி, பித்தளை விளக்குகளால் படியை அலங்காரம் செய்வர். 18 கலசங்களை வைத்து பூஜை செய்து நீராஞ்சன தீபத்தை (தேங்காயை உடைத்து அதன் மூடியில் நெய் விட்டு ஏற்றுவது) தந்திரி ஏற்றுவார். பின்னர் கற்பூர தீபாராதனை காட்டப்படும்.






      Dinamalar
      Follow us