சுவாமியே சரணம் ஐயப்பா-12: தினம் ஒரு தகவல்: விரதமிருந்து வந்தோம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா-12: தினம் ஒரு தகவல்: விரதமிருந்து வந்தோம் ஐயப்பா
ADDED : நவ 27, 2025 11:12 PM

விரதமிருந்து வந்தோம் ஐயப்பா கார்த்திகை மாதம் முதல் நாள் எப்போது வரும் என
காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிகின்றனர். இதற்காக ஒரு மண்டலம் அதாவது
41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கின்றனர்.
எந்த ஒரு செயலையும் ஒரு மண்டலம் தொடர்ந்து செய்து வந்தால் அதுவே பழக்கமாகி விடும். மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள்மனம், உடலை சுத்தமாக வைத்திருப்பர்.
காலையும், மாலையும் இரண்டு வேளை குளிர்ந்த தண்ணீரில் நீராடுவர். கோயில் வழிபாடு, பஜனை என மனம் எப்போதும் பக்தியில் ஈடுபடும். இதன் மூலம் மனக்கட்டுப்பாடு அதிகரிக்கும். எளிமையான சைவ உணவு உண்பதால் மென்மையும், சாத்வீக குணமும் மேலோங்கும்.
இப்படி மண்டல காலம் வரை விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்தால் பாவம் நீங்கும். இதை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தால் பிறவிப்பிணியும் தீரும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் பலர் சில நாட்களிலேயே விரதத்தை முடித்து மலைக்குச் செல்கின்றனர். அனைவரும் ஒரு மண்டலம் முழுமையாக விரதம் இருப்பது அவசியம்.

