ஸ்வாதி மாலிவால் விவகாரம்: முதல்வரின் தனிச்செயலர் மீது எப்.ஐ.ஆர்.
ஸ்வாதி மாலிவால் விவகாரம்: முதல்வரின் தனிச்செயலர் மீது எப்.ஐ.ஆர்.
UPDATED : மே 16, 2024 11:16 PM
ADDED : மே 16, 2024 11:13 PM

புதுடில்லி: ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் முதல்வர் உதவியாளர் பிபவ் குமார் மீது போலீசார் எப்.ஐ.ஆர், பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா பெண் எம்.பி., ஸ்வாதி மாலிவால். இவர் கடந்தசில நாட்களுக்கு முன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க சென்ற போது தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியது.
இதையடுத்து சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் ஸ்வாதி மாலிவால், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார், தன்னைத் தாக்கியதாக புகார் மனு அளித்தார். நடவடிக்கை இல்லை.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கெஜ்ரிவால் அரசு மீது கடுமையான விமர்சனம் செய்தனர்.இது உண்மையில் மிகவும் தீவிரமானதையடுத்து முதல்வரின் தனிச்செயலர் பிபவ் குமார் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தான் தாக்கப்பட்டது குறித்து ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் விளக்கியுள்ளார்.