ADDED : ஜன 28, 2026 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: தோகாவில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் சக பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தமிழக முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கத்தார் நாட்டின் தோகாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் கொச்சி வந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மோகன் 62, பயணம் செய்தார். அவர் அருகில் அமர்ந்து பயணித்த சக பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை அப்போதே அந்தப் பெண் கண்டித்துள்ளார்.
எனினும் விமானம் கொச்சியில் தரை இறங்கியதும் அதுகுறித்து விமான நிலையப் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து மோகனை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர். பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

