ADDED : ஜன 09, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகாவில் பணியாற்றி வரும் தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான அன்பு குமார், ராகபிரியா, கனகவல்லி ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் அன்புகுமாருக்கு, கூடுதல் பொறுப்பாக விவசாய துறைச் செயலர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் கனகவல்லி, கர்நாடக மாநில மருந்து வினியோகக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி கமிஷனர் ஆக பணியாற்றிய ராகபிரியா, கர்நாடக திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.