பிக்சட் டிபாசிட்டில் வரித்தொகை பிடித்தம்; வங்கி அதிகாரி மீது தாக்குதல்
பிக்சட் டிபாசிட்டில் வரித்தொகை பிடித்தம்; வங்கி அதிகாரி மீது தாக்குதல்
ADDED : டிச 08, 2024 06:09 PM

புதுடில்லி: வங்கியில் வைத்துள்ள பிக்சட் டிபாசிட் தொகையில், வரித்தொகை (டி.டி.எஸ்.,) பிடித்தம் செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர், வங்கி மேலாளரை தாக்கிய சம்பவம், குஜராத்தில் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள வஸ்த்ராப்பூரில் யூனியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஜெய்மன் ராவல் என்பவர், தன் சேமிப்புத்தொகையை, பிக்சட் டிபாசிட் செய்து வைத்துள்ளார். இதற்கான டி.டி.எஸ்., வரியை, வங்கி ஊழியர்கள் பிக்சட் டிபாசிட்டில் பிடித்தம் செய்து விட்டனர்.
இது பற்றி அறிந்த வாடிக்கையாளர் ஜெய்மன் ராவல், வங்கி ஊழியர்கள் மீது குற்றம் கூறி, வாக்குவாதம் செய்தார். வாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர், வங்கி மேலாளரை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில், வங்கி மேலாளரும் வாடிக்கையாளர் ஒருவரும் ஒருவரையொருவர் காலரைப் பிடித்துள்ளனர். அதை தொடர்ந்து வாடிக்கையாளர் வங்கி மேலாளரின் தலையில் தாக்குகிறார்.
வாடிக்கையாளருடன் இருக்கும் ஒரு வயதான பெண், சர்ச்சையைத் தீர்க்க முயற்சிப்பதும், இருவரில் ஒருவரின் கையைப் பிடித்து இழுப்பதும் காணப்படுகிறது. வாடிக்கையாளரால் வங்கி அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வஸ்த்ராபூர் போலீசார் விசாரிக்கின்றனர்.