அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்
ADDED : ஆக 28, 2025 12:52 PM

வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னபோலிஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பயன்படுத்திய துப்பாக்கியில் யூத, இந்தியா மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு வாசகங்கள் இடம்பெற்று இருந்த தகவல் வெளியானது.
அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணம் மினியபோலிஸ் நகரில் கத்தோலிக்க சர்ச் உடன் கூடிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை வகுப்புகள் துவங்குவதற்கு முன் அங்கு உள்ள சர்ச்சில் குழந்தைகள் வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது சர்ச்சின் பக்கவாட்டு பகுதியாக வந்த நபர் ஒருவர் ஜன்னல் வழியாக குழந்தைகள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
இந்த கொடூர தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். 14 பேர் குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் 23 வயதான ராபின் வெஸ்ட்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இந்த சூழலில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பயன்படுத்திய துப்பாக்கியில் யூத, இந்தியா மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இது தொடர்பான புகைப்படத்தை அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் லாரா லூமர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.