ADDED : மே 31, 2025 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மாநிலங்களுக்கு கூடுதல் வரிப்பகிர்வாக 81,735 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரி வருவாயில் மாநிலங்களுக்கான கூடுதல் வரிப் பகிர்வுத் தொகை 81,735 கோடி ரூபாய், ஜூன் 2ல் விடுவிக்கப்படும்.
இதையும் சேர்த்து மாநிலங்கள் பெறும் வரிப்பகிர்வு தொகை, கடந்த ஆண்டைக் காட்டிலும், 11,860 கோடி ரூபாய் அதிகமாகும்.
கூட்டாட்சி தத்துவ அடிப்படையிலும், 'வளர்ந்த இந்தியா 2047' என்ற நோக்கிலும் கூடுதல் வரிப்பகிர்வுத் தொகை மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக வழங்கப்படுகிறது.
மூலதன செலவினம், வளர்ச்சி மற்றும் சமூகநல திட்டங்கள், முன்னுரிமை திட்டங்களுக்கு மாநிலங்கள் செலவிட, இந்த கூடுதல் தொகை பயன்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.