ADDED : பிப் 01, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீடு, அலுவலகம், சிறிய கடைகள் உள்ளிட்டவற்றை வாடகைக்கு எடுத்துள்ளோர், ஆண்டுக்கு 2.40 லட்சம் ரூபாய்க்கு மேல் வாடகை செலுத்தினால், அதில், 5 சதவீதத்தை டி.டி.எஸ்., எனப்படும், முன்கூட்டிய வரியை பிடித்தம் செய்து கொண்ட பிறகே, உரிமையாளர் வாடகையை செலுத்த வேண்டும்.
இந்த, 2.40 லட்சம் ரூபாய் என்ற உச்ச வரம்பை, 6 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் வாயிலாக, டி.டி.எஸ்., பிடித்தம் செய்து அதை அரசுக்கு செலுத்துவதில் இருந்து வாடகைதாரர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளதுடன், சிறிய வீட்டு உரிமையாளர்களும் பயன் அடைவர்.