பஹல்காம் சம்பவம் மீண்டும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுங்கள்; ஓவைசி
பஹல்காம் சம்பவம் மீண்டும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுங்கள்; ஓவைசி
ADDED : மே 07, 2025 08:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: ''இன்னொரு பஹல்காம் சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும்'' என ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது நமது பாதுகாப்புப் படையினர் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல்களை நான் வரவேற்கிறேன்.
இன்னொரு பஹல்காம் சம்பவம் ஒருபோதும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.
பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பின் தலைமையிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். ஜெய் ஹிந்த்!. இவ்வாறு அவர் கூறினார்.