ADDED : ஏப் 20, 2025 01:54 AM
காட்னி: மத்திய பிரதேசத்தில், பள்ளி மாணவர்களை ஆசிரியர் மது குடிக்க செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் சிறுவர்கள் சிலரை ஒரு அறையில் அமர வைத்து, ஆசிரியர் ஒருவர் டம்ளரில் மது ஊற்றிக் கொடுத்து குடிக்க சொல்லும், 'வீடியோ' சமூகவலைதளத்தில் பரவியது. இதை அறிந்த காட்னி மாவட்ட கலெக்டர் திலிப் குமார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து காட்னி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு இந்த வீடியோவை அனுப்பியதில், சிறுவர்களுக்கு மது ஊற்றிக் கொடுத்த ஆசிரியர், பர்வாரா ஒன்றியத்தின் கிர்ஹானி கிராமத்தைச் சேர்ந்த லால் நவீன் பிரதாப் சிங் என தெரியவந்தது.
அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

