ஒழுக்கத்தை கற்பிப்பது விளையாட்டு பள்ளி விழாவில் முதல்வர் ரேகா பேச்சு
ஒழுக்கத்தை கற்பிப்பது விளையாட்டு பள்ளி விழாவில் முதல்வர் ரேகா பேச்சு
ADDED : ஜன 25, 2026 07:00 AM

புதுடில்லி: “ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் குழு மனப்பான்மை ஆகியவற்றை விளையாட்டுகள் தான் ஏற்படுத்துகின்றன,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
மதுரா சாலையில் அமைந்துள்ள டில்லி பப்ளிக் பள்ளியில் நேற்று நடந்த விளையாட்டு விழாவில், முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
பள்ளிப் பருவத்தில் விளையாட்டுகள் குழந்தைகளின் தலைமைத்துவத் திறனையும், எதிர்காலத்தை வடிவமைக்கும் நேர்மறை கண்ணோட்டத்தையும் வளர்க்கின்றன.
துாய்மை விளையாட்டுத் திடலில் பெறும் அனுபவங்கள் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் குழு மனப்பான்மை ஆகியவற்றை விளையாட்டுகள் தான் ஏற்படுத்துகின்றன.
பள்ளி மாணவ - மாணவியர் விளையாட்டுகளில் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும். ஆரோக்கியமான போட்டி வாயிலாக கல்வியையும் உடல் செயல்பாடுகளையும் சமநிலைப்படுத்த முடியும் .
வளர்ச்சியடைந்த டில்லி மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு ஒழுக்கம், தூய்மை மற்றும் விதிமுறைகளை மதிக்கும் இன்றைய குழந்தைகள் தான் மிகவும் அவசியம்.
எனவே, மாணவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதில் இருந்து விலகினால், குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படும்.
அர்ப்பணிப்பு பொறுப்புள்ள குடிமக்களை வளர்த்தெடுக்க பள்ளிகள் தான் உதவுகின்றன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களாக உருவெடுத்து, டில்லியை ஒரு அதிகாரம் பெற்ற மற்றும் வளர்ந்த தலைநகராக நிலைநிறுத்த உதவுவார்கள்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டை வழி நடத்த தயாராக வேண்டும். ஆரோக்கியமான, வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

