ADDED : ஆக 20, 2011 03:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: லோக்பால் மசோதா தொடர்பாக பொது மக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து ஆலோசனை கேட்கப்போவதாக பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்திருந்தது.
இதற்கு ஹசாரே குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஹசாரே குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது. ஆலோசனை கேட்கப்போவதாக அறிவித்துள்ள அரசு, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் நாங்கள் தயாரித்த மசோதாவையும் சேர்த்திருக்க வேண்டும் என கூறியுள்ளது.