காப்பீடு, அரசு வேலை, ஓய்வூதியம் வாக்குறுதிகளை அள்ளிவிடும் தேஜஸ்வி: பீஹார் தேர்தல்
காப்பீடு, அரசு வேலை, ஓய்வூதியம் வாக்குறுதிகளை அள்ளிவிடும் தேஜஸ்வி: பீஹார் தேர்தல்
ADDED : அக் 26, 2025 11:16 PM

பாட்னா: பீஹாரில் தேர்தல் ஜூரம் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், வாக்காளர்களை கவர பல்வே று அறிவிப்புகளை அள்ளி வீசி வருகிறார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. மொத்தம், 243 தொகுதிகளை கொண்ட பீஹார் சட்டசபைக்கு வரும் நவ., 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 14ல் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.
பஞ்சாயத் து ராஜ் பிரதிநிதிகளுக்கு இரட்டை படிகள், காப்பீடு மற்றும் ஓய்வூதியம்
முடி திருத்துவோர், குயவர், தச்சர் ஆகியோருக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன்
பெண் குழந்தைகளின் கல்வி, வாழ்வாதார வாய்ப்புகளுக்காக 'பேட்டி' எனப்படும் மகள் திட்டம்
இல்லத்தரசிகளுக்கு நிரந்தரமான வருவாய், உணவு, வீடு ஆகியவற்றை உறுதி செய்ய 'மா' எனப்படும் அம்மா திட்டம்
அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்கள், நிரந்தர தொழிலாளர்களாக பணியமர்த்தப்படுவர்
பீஹாரின் கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் 'ஜீவிகா தீதி' என்ற மகளிருக்கான மாத ஊதியம் 30,000 ரூபாயாக உயர்த்தப்படும்
கணவனை இழந்த வயதான தாய்மார்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம்
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் வசிக்கும் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம்
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இதற்காக பதவியேற்ற 20 நாட்களுக்குள் சிறப்பு வேலைவாய்ப்பு சட்டம் இயற்றப்படும்.

