தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கேரளாவில் வெப்பம் அதிகரிப்பு; வேலை நேரம் மாற்றம்

 கேரளாவில் வெப்பம் அதிகரிப்பு; வேலை நேரம் மாற்றம்

 கேரளாவில் வெப்பம் அதிகரிப்பு; வேலை நேரம் மாற்றம்


ADDED : பிப் 18, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 07:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு: கேரளாவில் வெப்பம் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்களின் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

கேரளத்தில் சூரியகதிர் வீச்சின் தாக்கம் அதிகரிப்பதால் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பிப்.20 வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது சரும நோய்க்கு வழிவகுக்கும் என்பதால் பேரிடர் மேலாண்மை ஆணையம் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்தது.

இதனால் தோட்டங்கள், திறந்த வெளிகளில் பணிபுரிபவர்களின் வேலை நேரத்தை மாற்றி தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை ஓய்வு அளிக்க வேண்டும். காலை 7:00 முதல் இரவு 7:00 மணிக்குள் 8:00 மணி நேரம் வேலை என்ற அடிப்படையில் வேலை நேரத்தை மாற்ற வேண்டும். மீறும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் கடல் மட்டத்தில் இருந்து 3000 அடிக்கு மேல் உள்ள பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்பதால் அப்பகுதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. ஆனால் மூணாறு கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் இருந்தும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us