தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'ஜனவரியில் இயல்பைவிட வெப்ப நிலை அதிகரிக்கும்'

'ஜனவரியில் இயல்பைவிட வெப்ப நிலை அதிகரிக்கும்'

'ஜனவரியில் இயல்பைவிட வெப்ப நிலை அதிகரிக்கும்'


ADDED : ஜன 02, 2025 02:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 02:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி, ''ஜனவரியில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்,'' என, இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.

இதுகுறித்து, டில்லியில் அவர் கூறியதாவது:

ஜனவரியில் பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில், குஜராத், கோவா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில், வழக்கத்தைவிட அதிக குளிர் அலைகள் இருக்கும்.

ஜன., - மார்ச் வரையிலான காலத்தில், வட மாநிலங்களின் மழைப்பொழிவு, நீண்ட கால சராசரியில், 86 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us