ADDED : ஜன 20, 2025 06:58 AM
உத்தரகன்னடா: ஹொன்னாவராவில் கர்ப்பிணி பசுவை, மர்ம கும்பல் தலையை வெட்டி உடலை கொண்டு சென்றதால், பதற்றம் நிலவுகிறது.
உத்தரகன்னடா, ஹொன்னாவராவின், சால்கோடு கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ண ஆச்சாரி என்பவர் பசு மாடுகள் வளர்க்கிறார். இவற்றில் ஒரு பசு கர்ப்பமாக இருந்தது.
நேற்று காலை பசுவை புல் மேய விட்டிருந்தார். மாலை வரை புல் மேய்ந்துவிட்டு தானாகவே வீட்டுக்கு வந்துவிடும். ஆனால் இரவாகியும் வீடு திரும்பவில்லை.
கிருஷ்ண ஆச்சாரி நேற்று காலை, பசுவை தேடி சென்ற போது, பசுவின் கால்கள், தலை தனித்தனியே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் பசுவின் தலையை வெட்டி போட்டு விட்டு, உடலை எடுத்து சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக, ஹொன்னாவரா போலீஸ் நிலையத்தில் கிருஷ்ண ஆச்சாரி புகார் அளித்துள்ளார்.
மர்ம கும்பலை கண்டுபிடித்து தண்டிக்கும்படி கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.