மருந்து தொழிற்சாலையில் பயங்கர தீ: குஜராத்தில் பரபரப்பு
மருந்து தொழிற்சாலையில் பயங்கர தீ: குஜராத்தில் பரபரப்பு
ADDED : நவ 07, 2024 07:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வல்சாத்: குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் உள்ள மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் இன்று மாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கட்டடம் முழுவதும் தீ பரவியதால், அப்பகுதி புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் இச்சம்பவம் காட்டு தீ போல பரவி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.யாரும் காயமடைந்துள்ளனரா என்ற விபரம் இன்னும் தெரியவரவில்லை.