தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கேரளா யூத வழிபாட்டு தலத்தில் பயங்கரவாத சதி; புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை

கேரளா யூத வழிபாட்டு தலத்தில் பயங்கரவாத சதி; புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை

கேரளா யூத வழிபாட்டு தலத்தில் பயங்கரவாத சதி; புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை


ADDED : அக் 14, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2026 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொச்சி:கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் மார்க்கெட் பகுதியில் 800 ஆண்டுகள் பழமையான கடவுபாகம் யூத வழிபாட்டு தலம் உள்ளது. நுழைவாயில் அருகே, 'பிளாசம் நர்சரி' என்ற தாவர வளர்ப்பு மையமும் உள்ளது. கடந்த 12ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு இங்கு, 'மாருதி சுசூகி - இக்னிஸ்' காரில் வந்த நபர் ஒருவர், வழிபாட்டு தலத்தின் நுழைவு வாயில் அருகே தீ வைத்தார்.

அதை தன் மொபைல் போனில் பதிவு செய்து, அங்கிருந்து தப்பிச்சென்றார். சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு சென்ற போலீசார், சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மர்ம நபர் வந்த காரின் பதிவெண் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில், எர்ணாகுளம் புத்தன்குருஸ் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த எபின் பால் என்பவரை அடுத்த சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனை சோதனை செய்ததில், கடவுபாகம் யூத வழிபாட்டு தலத்தில் தீ வைக்கப்பட்ட காட்சி பதிவாகியிருந்தது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உத்தரவின்பேரில், எபின் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, பல்வேறு யூத வழிபாட்டு தலங்கள் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த இருவரும் பேச்சு நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அது தொடர்பாக அடையாளம் தெரியாத நபரிடம் அவர் பேச்சு நடத்திய ஆதாரங்களும் சிக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து லேப் டாப் உள்ளிட்ட சில மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டன. போதைப்பொருள் தொடர்பாக எபின் பால் பல்வேறு பரிவர்த்தனைகள் மேற்கொண்டது தெரியவந்ததை அடுத்து, அவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு, ஹெராயின், கெட்டாமைன் உட்பட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. எர்ணாகுளம் மாவட்டம், மூவாட்டுப்புழாவில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் ஏற்கனவே இதுபோன்ற தீ வைப்பு சம்பவம் நடந்த நிலையில், அதற்கும் எபின் பாலுக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் உறுதியானது.

எனவே, கடவுபாகம், மூவாட்டுப்புழா யூத வழிபாட்டு தல தீ வைப்பு சம்பவத்தில் சர்வதேச பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பிருக்குமோ என கேரள போலீசார் சந்தேகித்துள்ளனர். சந்தேகிக்கப்படும் சர்வதேச தொடர்புகள் குறித்த தகவல்கள் மத்திய புலனாய்வு முகமைகளுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

எபின் பாலின் மொபைல் போன் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களில் விரிவான தடயவியல் ஆய்வு மேற்கொள்ள கேரள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.அதில் உள்ள தகவல் தொடர்புகளின் மூலங்களை கண்டறியவும், நிதிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யவும், பிற குற்றங்களுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us