தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ருவாண்டாவில் பிடிபட்ட பயங்கரவாதி நாடு கடத்தல்

ருவாண்டாவில் பிடிபட்ட பயங்கரவாதி நாடு கடத்தல்

ருவாண்டாவில் பிடிபட்ட பயங்கரவாதி நாடு கடத்தல்


ADDED : நவ 29, 2024 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 12:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி, சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி, கிழக்கு ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் சல்மான் ரெஹ்மான் கான். இவர், கர்நாடகாவின் பெங்களூரில் நாசவேலையில் ஈடுபடுவதற்காக வெடி பொருட்கள், ஆயுதங்கள் வினியோகித்ததாக என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் சி.பி.ஐ., 2023ல் வழக்குப்பதிவு செய்தன.

விசாரணை அமைப்பின் வலையில் இருந்து நழுவிய சல்மான், வெளிநாடு தப்பினார். இவரை தேடப்படும் குற்றவாளியாக சி.பி.ஐ., அறிவித்தது. இவருக்கு எதிராக, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசார், 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பித்தனர்.

இந்நிலையில், கிழக்கு ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் சல்மான் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ.,யின் கோரிக்கையை ஏற்று, அவர் நேற்று நாடு கடத்தப்பட்டார்.

இதே போல, மற்றொரு பயங்கரவாத வழக்கு மற்றும் போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகள், சவுதி அரேபியாவில் இருந்து சமீபத்தில் நாடு கடத்தப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us