காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
UPDATED : ஜன 12, 2024 08:04 PM
ADDED : ஜன 12, 2024 07:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.
உடன் சுதாரித்துக்கொண்ட ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் உயிர்பலி, காயம் குறித்த தகவல் வெளியாகவில்லை எனினும் ராணுவத்தினர் விடா முயற்சியுடன் எதிர் தாக்குதல் நடத்தி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருவதால், அங்கு பல மணி நேரமாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

